வேலூரில் டிரோன்கள் பறக்கத் தடை

 
drone camera

வேலூர் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள முதலைமைச்சர் மு.க.ஸ்டாலின் வேலூர் மாவட்டத்திற்க்கு வருகை தர இருப்பதால் டிரோன்கள் பறக்கத் தடை விதித்து காவல்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

CM Stalin to visit Trichy tomorrow: Ban on flying drones | முதல்வர்  ஸ்டாலின் நாளை திருச்சி வருகை: ட்ரோன்கள் பறக்க தடை உத்தரவு

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையை முன்னிட்டு, பாதுகாப்பு பணிக்காக, தமிழ்நாடு சட்டம் மற்றும் ஒழுங்கு கூடுதல் காவல்துறை தலைமை இயக்குநர் தலைமையில் வடக்கு மண்டல காவல்துறை தலைவர், 3 காவல்துறை துணை தலைவர்கள், 13 மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் சுமார் 3 ஆயிரம் காவல் அதிகாரிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

இதனால் வேலூர் புதிய பேருந்து நிலையம், பழைய மாநகராட்சி அலுவலகம் அருகே உள்ள பெரியார் சிலை, மேல்மெனவூர் இலங்கை அகதிகள் முகாம் மற்றும் முப்பெரும் விழா நடைபெரும் பள்ளிகொண்டா சத்தநேரி ஆகிய பகுதிகள் அனைத்திலும் நாளை இரவு வரை (No Flying, Zane) "ட்ரோன்கள் மற்றும் ராட்சத பலூன்கள்" பறக்க தடை செய்து வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N.மணிவண்ணன் உத்தரவு பிறப்பித்துள்ளார். மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.