பூக்களின் விலை கடும் உயர்வு..!

 
1

 பூக்களின் விலை குறை வாக இருந்த நிலையில் நேற்று பூக்களின் விலை அதிகமாக காணப்பட்டது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) சுப முகூர்த்த நாளாக இருப்பதையொட்டி இந்த விலை ஏற்றம் இருந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

குறிப்பாக சம்பங்கி பூ கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒரு கிலோ ரூ. 200-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் நேற்று ரூ. 300 முதல் ரூ. 400 வரை விற்பனையானது. முல்லைப் பூ ரூ. 600, மல்லிகைப்பூ ரூ. 400, சிவப்பு அரளிப்பூ ரூ. 240, சாதா அரளி 200, பட்டன் ரோஜா ரூ 200, மஞ்சள் ரோஜா ரூ. 320, பன்னீர் ரோஜா ரூ. 160, செண்டு மல்லி ரூ. 180, செவ்வந்தி ரூ. 300 முதல் ரூ. 400, பட்டுப் பூ ரூ. 120 ஆகிய விலைகளில் விற்பனை செய்யப்பட்டன.