தொடர் மழையால் வீட்டுக்குள் புகுந்த வெள்ளம்
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே தொடர்மழை காரணமாக வீட்டிற்குள் வெள்ளம் புகுந்தது.

விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி மாவட்டம் தொடர் கன மழை காரணமாக ரெட் அலர்ட் விடுக்கப்பட்ட உள்ள நிலையில், திருவண்ணாமலை விழுப்புரம் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாகவும் அனைத்து முக்கிய நீர்நிலைகளும் வேகமாக நிரம்பி வருகிறது.
இந்நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ளது சொறையப்பட்டு கிராமம். இந்த கிராமத்தில் நேற்று இரவு பெய்த தொடர் கனமழையின் காரணமாக காசியம்மாள்(62) என்பவரது வீட்டில் மழை நீர் புகுந்துள்ளது. இது குறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் தெரிவித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என சொல்லப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் சொரையப்பட்டு ஊராட்சியில் சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டது. அந்த சாலையானது, இணைப்பு சாலையை விட உயரமாக போடப்பட்டதாலும் முறையாக வடிக்கால் வாய்கால் அமைக்கப்படாத காரணத்தினாலும் மழை நீர் அதிக அளவு தேங்கியதால் வீடுகளுக்குள் புகுந்ததாக சொல்லப்படுகின்றது. சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் இதுவரை நேரில் சென்று பார்வையிட்டு மழை நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.


