கொடுமுடியாறு அணை கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை..!!
Updated: Oct 25, 2025, 11:40 IST1761372612012
கனமழை காரணமாக நெல்லை மாவட்டம் திருக்குறுங்குடி கொடுமுடியாறு அணையில் வேகமாக நிரம்பி வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக கொடுமுடியாறு அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது.
52.50 அடி கொள்ளளவு கொண்ட அணை வேகமாக நிரம்பி வருகிறது. இதன் காரணமாக கொடுமுடியாறு அணை கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


