கொள்ளிடம் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

 
அ அ

மயிலாடுதுறை மாவட்டம் காவேரி ஆறு மற்றும் கொள்ளிடம் ஆறு கரையோர மக்களுக்கு மாவட்ட ஆட்சியர் அபாயம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மயிலாடுதுறை மாவட்டம், மேட்டூர் அணையின் நீர்மட்டமானது 120.00 அடி முழு கொள்ளளவை எட்டியுள்ளது. அணையின் நீர்வரத்து அதிகப்படியாக உள்ளதால் அணையிலிருந்து உபரி நீர் காவிரி ஆற்றில் 58000 கன அடி தற்போது திறந்து விடப்படுகிறது. எனவே, கல்லணையிலிருந்து கொள்ளிடம் ஆற்றில் 58000 கனஅடி உபரி நீர் எந்த நேரத்திலும் வெளியேற்றப்பட வாய்ப்பு உள்ளதால் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள காவிரி, கொள்ளிடம் மற்றும் அதன் கிளை ஆறுகளில் முழு கொள்ளளவில் உபரி நீர் திறக்கபடவுள்ளதால் கரையோரம் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும் அவர்களின் உயிர் மற்றும் உடைமைகளின் பாதுகாப்புக்காக அனைத்து நடவடிக்கைகாகவும், கரையோர மக்கள் ஆற்றில் இறங்கவோ, ஆற்றை கடக்கவோ, கால்நடைகளை ஆற்றில் இறக்கி குளிப்பாட்டவோ, துணி துவைப்பது, செல்பி எடுப்பது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மேற்படி உபரி நீர் தொடர்பாக ஏற்படும் சேத விபரங்கள் மற்றும் புகார்களை மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டுப்பாட்டு அறை எண்-1077 மற்றும் 04364-222588 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு தங்களது புகார்களை தெரிவிக்கலாம் என மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.