தமிழகத்தில் வெள்ள பாதிப்பு : மத்திய குழு இன்று ஆய்வு!

 
rain

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததன்  காரணமாகவும், வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாகவும்,   தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்தது. அத்துடன் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில்  பெய்த கனமழையின் காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.  

stalin

மழை ஓய்ந்த நிலையிலும் கன்னியாகுமரி, நெல்லை,விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை காரணமாக பல ஆயிரம் ஏக்கர் பயிர்கள் நீரில் மூழ்கி நாசமாகின.  இதனால் டெல்டா மாவட்டங்களில் ஏற்பட்ட பாதிப்புகளை  ஆய்வு செய்ய அமைச்சர் குழுவை தமிழக அரசு நியமித்தது. இந்தக் குழுவானது சமீபத்தில் முதல்வரிடம் அறிக்கை சமர்ப்பித்தது. அத்துடன் திமுக எம்பி டி.ஆர். பாலு டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சகம் இந்த அறிக்கையை அளித்தார். 

stalin

அத்துடன் தமிழக வெள்ள நிவாரணமாக ரூபாய் 2,709 கோடியும் உடனடியாக,  550 கோடியும் விடுவிக்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுக்கப்பட்டது.  இந்த சூழ்நிலையில் தமிழகத்தில் உள்ள வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்திய குழு இன்று தமிழகத்திற்கு வருகை புரிகிறது. 7 உயர் அதிகாரிகளைக் கொண்ட குழு கன மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிடுவதுடன் சென்னை வந்து தமிழக செயலாளருடன் கலந்தாலோசிக்கும்.   பின்னர் நாளை மற்றும் நாளை மறுநாள் இரண்டு குழுக்களாக பிரிந்து சென்னை ,செங்கல்பட்டு ,காஞ்சிபுரத்தில் ஒரு குழுவும், கன்னியாகுமரியில் ஒரு குழுவும்  ஆய்வு செய்கிறது. இதையடுத்து கடலூர் ,மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் ,தஞ்சை ஆகிய மாவட்டங்களில் நாளை மறுநாள் ஒரு குழுவும், வேலூர், ராணிப்பேட்டை மற்றும் ராணிப்பேட்டையில் மற்றொரு குழுவும், என மொத்தம் 11 மாவட்டங்களில் மத்திய குழு இந்த 2,3  நாட்களில் ஆய்வு மேற்கொள்கிறது.  இதை தொடர்ந்து வருகிற 24-ஆம் தேதி மத்திய குழு முதல்வர் முக ஸ்டாலினை நேரில்  சந்தித்து ஆலோசனை செய்கிறது. மத்திய குழுவை வருவாய் நிர்வாக  ஆணையர் பணீந்திர ரெட்டி, வருவாய்த்துறை செயலாளர் குமார் ஜெயந்த் ஆகியோர் ஒருங்கிணைப்பாளர்களாக இருந்து வழிநடத்தி செல்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.