வெள்ள நிவாரணம்: மாநிலங்களவையில் திமுக ஒத்திவைப்பு நோட்டீஸ்

 
tn

மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள தமிழகத்திற்கு மத்திய அரசு போதிய நிவாரண நிதி வழங்கவில்லை என தமிழக அரசு மற்றும் திமுக கூட்டணி கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.

mps

இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியும் மத்திய அரசு பதில் அளிக்காததால் நாடாளுமன்ற வளாகத்தில் கருப்பு சட்டை அணிந்து போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்தனர். அதன்படி நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு திமுக உள்ளிட்ட தமிழகத்தை சேர்ந்த எம்.பிக்கள் கருப்பு சட்டை அணிந்து கையில் மத்திய அரசுக்கு எதிரான பதாகைகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். 

trichy siva

இந்நிலையில் தமிழ்நாட்டுக்கு புயல், வெள்ள நிவாரணம் வழங்காத விவகாரம் குறித்து விவாதிக்க மாநிலங்களவையில் திமுக ஒத்திவைப்பு நோட்டீஸ் அளித்துள்ளது. திமுக மாநிலங்களவை தலைவர் திருச்சி சிவா நோட்டீஸ் அளித்துள்ளார்.