விமானக் கோளாறு- தரையிறக்குவது எப்படி?
திருச்சியில் இருந்து சார்ஜா புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் கோளாறு ஏற்பட்டதை அடுத்து, அது இன்னும் சில நிமிடங்களில் தரையிறங்க உள்ளது.
திருச்சியில் இருந்து ஷார்ஜாவுக்கு மாலை 5.40க்கு புறப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் மீண்டும் திருச்சியில் தரையிறக்க விமானிகள் முயற்சிக்கின்றனர். ஆனால் தரையிறக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் வானத்திலேயே வட்டமிட்டுவருகிறது. குறிப்பாக நிலத்திலிருந்து 4,255 அடி உயரத்தில் வட்டமடித்துவருகிறது.
இந்நிலையில் எரிபொருளை காலி செய்து விமானத்தின் எடையைக் குறைத்து தரையிறக்க முயற்சி செய்யப்படுகிறது. மூன்று சக்கரங்கள் செயல்படாமல் இருந்தாலும் விமானத்தை தரையிறக்க வழி இருப்பதால் அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருகிறது. திருச்சியில் இருந்து சார்ஜா புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் கோளாறு ஏற்பட்டதை அடுத்து, அது இன்னும் சில நிமிடங்களில் தரையிறங்க உள்ளது. விமானத்தின் சக்கரங்கள் உள்ளே செல்லாததால், அது தரையிறங்கும் போது அசம்பாவிதம் ஏற்பட்டால், உள்ளே இருக்கும் பயணிகளுக்கு சிகிச்சை கொடுப்பதற்காக திருச்சி அரசு ஹாஸ்பிட்டல் தயாராக இருப்பதாக அம்மாவட்ட ஆட்சியர் பிரதீப் தெரிவித்துள்ளார்.

விமானக் கோளாறு குறித்து திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி கூறுகையில், “விமானம் பாதுகாப்பாக தரையிறங்கும் என்று நம்புகிறோம். இன்னும் சிறிது நேரத்தில் விமானம் தரையிறங்கும். அனைத்து விதமான ஏற்பாடுகளையும் விமான நிலையத்தில் செய்துள்ளோம்” என்றார்.


