கோவில்பட்டியில் அமையும் விமானப் பயிற்சி மையம்

 
s

பிளையிங் ட்ரைனிங் ஆர்கனைசேஷன் FT0 கோவில்பட்டி வட்டம் கயத்தாறு பகுதியில் அமைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Image

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தோணுகால் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் விமானப் பயிற்சி மையத் திட்டத்தின் கட்டுமானப் பணிகளை கண்காணிப்பதற்காக தமிழ்நாடு தொழில் மேம்பாட்டு கழகம் முக்கிய நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. தமிழ்நாடு அரசின் நிறுவனமான தமிழ்நாடு தொழில் மேம்பாட்டு கழகம், கோவில்பட்டியில் உருவாகி வரும் விமானப் பயிற்சி அமைப்பு எனப்படும் பிளையிங் டிரெயினிங் ஆர்கனைசேஷன் திட்டத்தின் கட்டுமானப் பணிகளை மேற்பார்வையிட சுயாதீன பொறியாளரை தேர்வு செய்வதற்கான மின்னணு டெண்டர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன்படி, கட்டுமானப் பணிகளின் தரம், தொழில்நுட்ப அம்சங்கள் மற்றும் திட்ட முன்னேற்றத்தை தொடர்ந்து கண்காணித்து ஆலோசனை வழங்கும் தகுதியான நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன. ஆர்வமுள்ள நிறுவனங்கள் டெண்டர் ஆவணங்களை தமிழ்நாடு தொழில் மேம்பாட்டு கழகம் மற்றும் தமிழ்நாடு அரசின் மின்னணு டெண்டர் இணையதளங்களில் இருந்து இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஒப்பந்தப் புள்ளிகள் மற்றும் விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான கடைசி நாள் வருகிற ஜூலை 15ஆம் தேதி மதியம் 3 மணி என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் விமானப் பயிற்சி மற்றும் விமானத் துறை சார்ந்த உள்கட்டமைப்பு வசதிகளை வலுப்படுத்தும் முக்கிய திட்டங்களில் ஒன்றாக கோவில்பட்டி விமானப் பயிற்சி மையம் கருதப்படுகிறது.

இந்த திட்டத்தின் கட்டுமானப் பணிகள் உயர்தரத்துடன் மற்றும் திட்டமிட்ட காலக்கெடுவிற்குள் நிறைவேற்றப்படுவதை உறுதி செய்யும் நோக்கிலேயே சுயாதீன பொறியாளர் நியமனத்திற்கான டெண்டர் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக தமிழ்நாடு தொழில் மேம்பாட்டு கழகம் தெரிவித்துள்ளது. கோவில்பட்டியில் உருவாகி வரும் இந்த விமானப் பயிற்சி மையம் செயல்பாட்டுக்கு வந்தால், தென் தமிழக இளைஞர்களுக்கு விமானப் பயிற்சி பெறும் புதிய வாய்ப்புகள் உருவாகும் என்பதுடன், அப்பகுதியின் தொழில் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கும் ஊக்கமளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.பிளையிங் ட்ரைனிங் ஆர்கனைசேஷன் FT0 கோவில்பட்டி வட்டம் கயத்தாறு பகுதியில் அமைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது