அனுமதியின்றி கொடிக்கம்பம் - பாஜகவினர் கைது

 
tn

அனுமதியின்றி கொடிக்கம்பம் அமைக்க முயன்ற பாஜகவினர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

bjpநவம்பர் 1ஆம் தேதி தொடங்கி 100 நாட்களுக்கு ஒவ்வொரு நாளும் தமிழகம் முழுவதும் 100 பாஜக  கொடிக்கம்பங்கள் நடப்படும் என்று தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்திருந்தார். ஆனால் சென்னை முழுவதும் அனுமதி இன்றி வைக்கப்பட்ட பாஜக கொடிகம்பங்களுக்கு போலீசார் அனுமதி மறுத்துள்ளனர். சென்னையில் மாநகராட்சியின் அனுமதியின்றி பாஜக கொடி கம்பங்களை அமைக்க போலீசார் அனுமதி மறுத்துள்ளனர். 

bjp

இந்நிலையில் கோவை மசக்காளிபாளையம் ஜங்ஷனில் அனுமதி இன்றி பாஜக கொடிக்கம்பம் அமைக்க முயன்ற பாஜகவினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  அனுமதி இன்றி கொடிக்கம்பம் வைக்க முயன்றதை போலீசார் தடுத்ததால் வாக்குவாதம் ஏற்பட்டது. பாஜக மாவட்ட தலைவர் பாலாஜி உத்தமராமசாமி உட்பட 30க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.