தமிழ்நாட்டில் ஐந்து தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு..!
May 27, 2026, 05:20 IST1779839436000
எஸ்.பி. வேலுமணி தலைமையில் இருந்த மதுராந்தகம் எம்.எல்.ஏ. மரகதம் குமரவேல், தாராபுரம் எம்.எல்.ஏ. சத்யபாமா, பெருந்துறை எம்.எல்.ஏ. ஜெயக்குமார் ஆகியோர் ராஜினாமா செய்தனர். தொடர்ந்து அவர்கள் மூவரும் தவெகவில் இணைந்தனர். இதனைத் தொடர்ந்து மூன்று தொகுதிகளும் காலியானதாக அரசிதழ் வெளியிடப்பட்டது.
அந்த வரிசையில் அதிமுக அம்பாசமுத்திரம் எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, தவெகவில் இணைந்தார். இதனை தொடர்ந்து நேற்று அம்பாசமுத்திரம் தொகுதி காலியானதாக அரசிதழ் வெளியிடப்பட்டுள்ளது.
தற்போது தமிழ்நாட்டில் திருச்சி கிழக்கு, மதுராந்தகம், தாராபுரம், பெருந்துறை மற்றும் அம்பாசமுத்திரம் ஆகிய ஐந்து தொகுதிகள் மொத்தம் காலியாகியுள்ளது.

