இளைஞரின் குடும்பம் சீரழித்து கொலை- பீகாரை சேர்ந்த 5 பேர் கைது
சென்னையில் பீகார் இளைஞரின் குடும்பம் கொல்லப்பட்ட வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டார்.

பீகார் மாநிலத்தில் இருந்து வேலைக்காக சென்னை வந்த கௌரவ்குமார் மற்றும் அவரது குடும்பத்தை கொலை செய்த சம்பவத்தில் சிகந்தர், நரேந்திர குமார், ரவீந்திரநாத் தாகூர், விகாஸ் உள்ளிட்ட 5 பேர் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட 5 பேரும் பீகார் மாநிலத்தை சேர்ந்தவர்கள் என காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.
நடந்தது என்ன?
பீகாரை சேர்ந்த 24 வயது இளைஞர் கௌரவ்குமார் தனது மனைவி மற்றும் 2 வயது ஆண் குழந்தையுடன் வேலை தேடி சென்னை வந்துள்ளார். சென்னை தரமணியில் உள்ள மத்திய பாலிடெக்னிக் கல்லூரியில் காவலாளியாக வேலை சேர்ந்த கௌரவ்குமார், தனது மனைவி மற்றும் குழந்தையுடன் மத்திய பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று முன் தினம் இரவு குடியிருப்பில் தனியாக இருந்த இளைஞரின் மனைவியிடம் அத்துமீறிய மர்மகும்பல், அவரை பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாக கொலை செய்துள்ளனர். மனைவியின் அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த பீகார் இளைஞரை மர்மநபர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி, அந்த இளைஞரை மர்ம நபர்கள் அடித்தே கொலை செய்துள்ளனர். தாய், தந்தையை இழந்து கண்ணீர்விட்டு கதறிக்கொண்டிருந்த அவர்களின் 2 வயது ஆண் குழந்தையையும், அந்த மர்மகும்பல் கொடூரமாக கொலை செய்தது.


