களத்தில் இறங்கிய அமைச்சர்- மீனவர்கள் போராட்டம் வாபஸ்
Nov 22, 2026, 14:31 IST1795338082939
சென்னை காசிமேட்டில் 4வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்களுடன் அமைச்சர் மரிய வில்சன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.
ஆந்திராவில் சிறைபிடிக்கப்பட்ட மீன்பிடி படகுகளை மீட்க வேண்டும், முரசு புயலில் சிக்கி பலியான மீனவர்களின் குடும்பத்திற்கு இழப்பீட்டை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி 4வது நாளாக சென்னை காசிமேடு மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மீனவர்கள் போராட்டத்தால் மீன்பிடி சார்ந்த தொழில்கள் பாதிக்கப்பட்ட நிலையில், மீனவர்களுடன் அமைச்சர் மரிய வில்சன் பேச்சுவார்த்தை நடத்தினார். மீனவர்களின் கோரிக்கைகளை
நிறைவேற்றி தருவதாக உறுதியளித்ததை தொடர்ந்து தற்போது போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

