"புயல் வருது... உடனடியாக கரைக்கு திரும்புக"- மீனவர்களுக்கு பறந்த அலார்ட் மெசேஜ்

 
fishermen

கடலுக்கு மீன்பிடிக்க சென்ற சென்னை காசிமேடு மீனவர்கள் உடனடியாக கரைக்கு திரும்ப உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 


நவ.13ம் தேதி தென்கிழக்கு வங்கக்கடலில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக் கூடும். இது 14 ஆம் தேதி வடமேற்கு திசையில் நகர்ந்து மேலும் வலுப்பெறும் என்றும்,  அதன் பின்னர் வரும் 13,14 தேதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அந்தமான் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

இந்நிலையில் கடலுக்கு மீன்பிடிக்க சென்ற சென்னை காசிமேடு மீனவர்கள் உடனடியாக கரைக்கு திரும்ப உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் 13ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி அது புயலாக மாறக்கூடும் என்பதால் கரை திரும்ப உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அனைத்து விதமான படகுகளும் 12ஆம் தேதிக்குள் காசிமேட்டிற்கு வந்தடைய வேண்டும், விதிகளை மீறினால் கடும் நடவடிக்கை என எச்சாிக்கை விடுக்கப்பட்டுள்ளது.