மீன் பிடித்து கொண்டிருந்தபோது சிறுநீர் கழித்த மீனவர் மரணம்

 
fishermen

ஆழ்கடலில் விசைப்படகில் மீன் பிடித்து கொண்டு இருந்த மீனவர் மது போதையில் சிறுநீர் கழித்த பொழுது நிலை தடுமாறி கடலில் விழுந்து உயிரிழந்த சம்பவம் மீனவர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


சென்னை காசிமேடு பகுதியைச் சேர்ந்தவர்  முத்துக்குமார் இவருக்கு சொந்தமான விசைப்படகில் மீனவர்கள்  வேலு, மணி ,வினோத், தேசக்கண்ணு,மல்லி, ராமச்சந்திரன், நாராயணன், ராஜா பழனி உள்ளிட்ட  9  மீனவர்கள் கடந்ந 7  தேதி காலை காசிமேடு மீன்பிடி துறைமுகத்திலிருந்து ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்றனர். வங்க கடலில் 60 நாட்டிக்கல் தொலைவில் ஆழ்கடலில் மீன்பிடித்து கொண்டு இருந்த போது எண்ணூர் சுனாமி குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த பழனி (56)என்ற மீனவர் மது போதையில்  சிறுநீர் கழிப்பதற்காக  விசைப்படகில் நின்று கொண்டிருந்தபோது  நிலை தடுமாறி கடல்நீரில் விழுந்துள்ளார். 

இதனை பார்த்த மீனவர்கள் மணி மற்றும் ராஜா ஆகியோர் பழனியை  காப்பாற்றி  விசைப்படகில் படுக்க வைத்ததாகவும் பின்னர் இரவு   சாப்பிட எழுப்பும்போது சாப்பாடு வேண்டாம்  எனக்கூறி தண்ணீர் மட்டும் குடித்துவிட்டு தூங்கியுள்ளார். பின்னர் காலை 05.00 மணி அளவில் டீ குடிப்பதற்காக எழுப்பியதும் பழனி எழுந்திருக்காததால் தூக்கி பார்த்தபோது இடது காதில் ரத்தம் வந்த நிலையில் உயிரிழந்துள்ளார். உடனே விசைப்பட உரிமையாளருக்கு மீனவர்கள் தகவல் தெரிவித்து  விசைப்படகை கரைக்கு கொண்டு வந்தனர். இதனையடுத்து காசிமேடு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்ததன் பேரில் காவல் உதவி ஆய்வாளர் திரு சதீஷ்குமார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பிரேதத்தை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு பிரேத ப‌ரிசோதனை‌க்காக அனுப்பி வைத்தனர்