மோடி வருகை- ஏப்.4 முதல் 6 வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை

 
மோடி

பாரதப் பிரதமர் மோடி ராமேஸ்வரத்திற்கு வருகை தர உள்ளதை ஒட்டி, ஏப்ரல் நான்கு முதல் ஆறாம் தேதி வரை ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பகுதியில் உள்ள மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்ல தடை விதித்து மீன்வளத்துறை அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

fishermen

ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட மீன்பிடி துறைமுகத்தில் இருந்து சுமார் 2000-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளிலும், 3000-க்கும் மேற்பட்ட நாட்டு படடுகளிலும் மீனவர்கள் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர், இந்த நிலையில் வருகின்ற ஏப்ரல் ஆறாம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் ராமேஸ்வரத்திற்கு வருகை தந்து பாம்பன் புதிய பாலத்தை திறந்து வைத்து ராமேஸ்வரம் பகுதிக்கு ரயில் சேவை அர்ப்பணிக்க உள்ளார்.

இதனை அடுத்து வருகின்ற ஏப்ரல் நான்கு முதல் ஆறாம் தேதி வரை ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட மீன்பிடி துறைமுகத்திலிருந்து மீன் பிடிக்க செல்லும் மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர். மேலும் கடல் பகுதியில் சந்தேகத்துக்கு இடமாக யாரும் தென்பட்டால் காவல்துறைக்கு தகவல் கொடுக்கவும் அறிவித்துள்ளதோடு மரைன் போலீசார் 24 மணி நேரமும் கடல் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருவதுமட்டுமல்லாது மத்திய, மாநில உளவு பிரிவு போலீசார் ராமேஸ்வரம் பகுதிக்கு பாரத பிரதமர் வருகை தருவதை ஒட்டி தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.