கடலுக்கு சிப்பி பிடிக்க சென்ற மீனவர் மூச்சு திணறி உயிரிழப்பு

 
Death

குமரி மாவட்டம் கருங்கல் அருகே கடலுக்கு சிப்பி பிடிக்க சென்ற மீனவர் மூச்சு திணறி உயிரிழந்தார்.

fishermen


கருங்கல் அருகே இணையம் புத்தன்துறை பாரதியார் தெருவை சேர்ந்தவர் லாரன்ஸ். அதே பகுதியை சேர்ந்தவர் ஆன்சலின். மீனவர்களான 2 பேரும் சேர்ந்து இன்று காலை இணையம் புத்தன்துறையில் இருந்து பைபர் படகில் கடலுக்குள் சிப்பி பிடிப்பதற்காக சென்றுள்ளனர். கடலுக்குள் இறங்கிய 2 பேரும் சேர்ந்து சிப்பியை பிடித்து கொண்டிருந்த போது, லாரன்சுக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. உடனே அவரை மீட்டு, கரைக்குகொண்டு வந்த நிலையில், அருகில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். 

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த குளச்சல் மரைன் போலீசார் லாரன்ஸ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.