தூத்துக்குடியில் கடலில் தவறி விழுந்து மீனவர் உயிரிழப்பு

 
தூத்துக்குடியில் கடலில் தவறி விழுந்து மீனவர் உயிரிழப்பு

ஆழ்க்கடலில் தங்கி மீன் பிடித்துக் கொண்டிருக்கும்போது  பலத்த காற்று காரணமாக படகிலிருந்து கடலில் தவறி விழுந்து ஜவகர் என்ற மீனவர் பலியான சம்பவம் தூத்துக்குடியில் சம்பவத்தை ஏற்படுத்தியுள்ளது.

fisherman fell from the boat while fishing in the deep sea died |  ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர் தவறி விழுந்து உயிரிழப்பு

தூத்துக்குடி திரேஸ்புரத்தை சேர்ந்த தேவதாஸ் என்ற மீனவருக்கு சொந்தமான படகில் கடந்த ஏழாம் தேதி ஆழ்கடல் தங்கி மீன் பிடிப்பதற்காக ஜவகர் உள்ளிட்ட 8 மீனவர்கள் நாட்டுப் படகில சென்றுள்ளனர். நேற்று இரவு ராமேஸ்வரம் கடல் பகுதியில் ஆள் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருக்கும் போது பலத்த காற்று காரணமாக படகிலிருந்து ஜவகர் தவறி கீழே விழுந்துள்ளார். இதில் கடலில் தத்தளித்த ஜவகர் மூச்சு திணறி பரிதாபமாக பலியானார். கடலில் பலியான ஜவகரின் உடலை சக மீனவர்கள் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.

இதைத் தொடர்ந்து பலியான மீனவர் ஜவகரின் உடல் பரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. மேலும் கடலில் தவறி விழுந்து மீனவர் பலியானது தொடர்பாக மீன்வளத்துறை அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.