படகில் இருந்து தவறி விழுந்து மீனவர் பலி

 
fishermen

நாகை மீனவர் பைபர் படகில் இருந்து கடலில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் குறித்து கடலோர பாதுகாப்பு குழும போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.

Inexperienced Indian fishermen do not understand maritime demarcations,'  hence land in Lankan priso- The New Indian Express

நாகப்பட்டினத்தை அடுத்த அக்கரைப்பேட்டை மீனவர் கிராமத்தை சேர்ந்தவர் செல்வமணி (56). இவருக்கு விஜயலட்சுமி என்ற மனைவியும், சீதா மற்றும் லட்சுமி என்ற இரு மகள்களும் உள்ளனர். செல்வமணி இன்று அதிகாலை 4 மணிக்கு அக்கரைப்பேட்டை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து வழக்கம் போல் கடலுக்கு மீன்பிடிக்க தனது பைபர் படகில் சென்றுள்ளார். 
துறைமுகத்தில் இரண்டு நாட்டிக்கல் மைல் தூரத்தில் மீன்பிடித்துக்கொண்டிருந்த போது படகிலிருந்து நிலைதடுமாறு கடலில் விழுந்துள்ளார். இதில் அவர் நீரில் மூழ்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இந்நிலையில் மீன்பிடித்து விட்டு கரை திரும்பிய சக மீனவர்கள் செல்லும்வழியில்  படகு மட்டும் தனியாக நிற்பதை  பார்த்து அருகில் தேடி உள்ளனர். அப்போது உயிரிழந்த நிலையில் செல்வமணி கடலில் மிதந்துள்ளார். இதனை அடுத்து அவரது உடலை மீட்க சக மீனவர்கள் அக்கரைப்பேட்டை மீன் பிடித்து துறைமுகத்திற்கு கொண்டு வந்தனர். அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் நாகை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக கொண்டுவரப்பட்டது. மீனவர் செல்வமணி உயிரிழந்தது குறித்து நாகப்பட்டினம் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்துவருகின்றனர். மீனவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.