சென்னையில் மீனவர் அடித்துக்கொலை- இருவர் கைது

 
murder

சென்னையில் முன் விரோதத்தால் மீனவர் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் இருவரை போலீசார் கைது செய்தனர்.

murder

சென்னை எண்ணூர் பெரியகுப்பம் கடற்கரை சாலை பகுதியை சேர்ந்த சங்கர் மீன்பிடி தொழில் செய்து வருகிறார். கடந்த 18 தேதி இரவு மது போதையில் இருந்த சங்கர் வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்த போது, அதே பகுதியை சேர்ந்த மீனவர் பிரதிப் மனைவி சர்மிளாவை பார்த்து தகாத வார்த்தைகளால் பேசி திட்டியுள்ளார். இதுகுறித்து சர்மிளா தனது கணவர் பிரதீப்பிடம் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பிரதீப் சங்கரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார் .

இதனை அறிந்த பிரதீப் சகோதரர்கள் பிரேம், குமார் ஆகிய இருவரும் சங்கரை தாக்கி உள்ளனர். சங்கரின் முகத்தில் குத்தி கீழே தள்ளியுள்ளார். இதில் பின் தலையில் பலத்த காயமடைந்த சங்கரை உறவினர்கள் மருத்துவமனையில் அனுமதித்தனர். மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்டு சுய நினைவு இழந்து அரசு ஸ்டான்லி மருத்துவமனை சிகிச்சை பெற்று வந்த சங்கர் உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து எண்ணூர் போலீசார் வழக்கு வழக்குப்பதிவு செய்து பிரதீப், பிரேம், ஆகிய இருவரை கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள குமார் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர். அடிதடி வழக்காக பதிவு செய்திருந்த நிலையில், கொலை வழக்காக மாற்றப்பட்டு எண்ணூர் போலீசார் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.