காசிமேடு மீன்மார்க்கெட்டில் மீன்கள் விலை கடுமையாக உயர்வு

 
kasimedu

மீன்பிடி  தடைக்காலம் அமலில் உள்ளதால் மின்கள் வரத்து குறைந்துள்ள நிலையில், சென்னை காசிமே மீன் மார்க்கெட்டில் மீன்கள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. 

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 15ஆம் தேதி முதல் மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்பட்டு உள்ளதால் பெரிய விசைப்படகுகள்  மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. இதனால் மீன் பிடிக்கும் பைபர் படகுகள் மற்றும் மீன்பிடி படிகுகளில் பிடித்த வரும் மீன்கள் மட்டுமே காசிமேடு மீன் மார்ட்க்கெட்டிற்கு கொண்டுவரப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. மீன்பிடி  தடைக்காலம் அமல்படுத்தப்பட்டுள்ளதால் பெரிய வகை மீன்களுக்கு காசிமேட்டில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பௌர்ணமி மற்றும் கருட சேவை விழாக்களால் வழக்கத்தை விட மக்கள் கூட்டம் குறைவாக இருந்த போதிலும், வரத்து குறைவாக இருப்பதால் மீன்கள் விலை அதிகரித்து காணப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் ஏராளமான அசைவப் பிரியர்கள் மீன்களை வாங்க காசிமேடு மீன்பிடி சந்தையில் குவிந்துள்ளனர். 

kasimedu

காசிமேடு மீன் சந்தையில் சிறிய வகை வஞ்சிரம் 1 கிலோ 1300 ரூபாய்கு விற்பனை செய்யப்படுகிறது. சங்கரா 300 ரூபாயிலிரந்து  700 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. நெத்திலி மீன் ஒரு கிலோ  300 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வவ்வால் மீன் ஒரு கிலோ 500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ  கடம்பா மீன்  600ரூபாய்க்கு விற்பனை  செய்யப்படுகிறது. இறால்  ஒரு கிலோ  400 ரூபாய்க்கு விற்பனை  செய்யப்படுகிறது. பாறை மீன் ஒரு கிலோ 500 ரூபாய்க்கு விற்பனை  செய்யப்படுகிறது. ஒரு கிலோ கொடுவா மீன் 600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது