எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்த முத்தமிழ்செல்விக்கு முதல்வர் வாழ்த்து

 
mk stalin

உலகிலேயே உயரமான எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்த தமிழ்நாட்டை சேர்ந்த முத்தமிழ் செல்விக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

2023 ஆம் ஆண்டு ஏசியன் ட்ரக்கிங் இன்டர்நேஷனல் நிறுவனம் மூலம் நேபாளம் தலைநகர் காட்மாண்டுவில் இருந்து புறப்பட்ட குழு இணைந்து எவரெஸ்ட் சிகரத்தில் 8848 மீட்டர் ஏறி சாதனை செய்ய திட்டமிட்டார் சென்னையை சேர்ந்த முத்தமிழ் செல்வி.  பயிற்சியாளரான திரிலோகசந்தர் உதவியால் முத்தமிழ் செல்வி எவரெஸ்ட் சிகரம் அடைய பயிற்சி மேற்கொண்டார். ஆனால் பொருளாதார வசதியில்லாமல் தவித்த நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் நேரில் அழைத்து, அவருக்கு 10 லட்சம் அரசு சார்பில் வழங்கிய நிலையில்,  அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், 15 லட்சம் தன் சார்பாக கொடுத்தார். 

Image

இதையடுத்து தனது சாதனை பயணத்தை தொடங்கிய முத்தமிழ் செல்வி இவர் கடந்த ஏப்ரல் 2ம் தேதி சென்னையில் இருந்து புறப்பட்டு நேபாளம் சென்றார் . நேபாள அரசின் ஒத்துழைப்புடன் நடைபெற்ற இந்த எவரெஸ்ட் சிகரம் ஏறுதலில் உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து ஏராளமானோர் பங்கேற்றனர்.  முத்தமிழ் செல்வி எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை செய்ய தமிழ்நாட்டில் இருந்து தேர்வு செய்யப்பட்ட முதல் பெண்.இந்த சூழலில் மே 18ஆம் தேதி மௌன்ட் எவரெஸ்ட்க்கு பயணத்தை தொடங்கி இவர்,  23ஆம் தேதி  எவரெஸ்ட் பகுதியை  வெற்றிகரமாக அடைந்தார் .  இதன் மூலம் உலகிலேயே மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்து தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார் முத்தமிழ் செல்வி.

இந்நிலையில் முதலமைச்சர்  ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில்,#எவரெஸ்ட் உச்சியைத் தொட்டுத் திரும்பியுள்ள சாதனைப் பெண்மணி திருமிகு. முத்தமிழ்ச்செல்வி அவர்களுக்கு வாழ்த்துகள்! என்று பதிவிட்டுள்ளார்.