முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து- அரசாணை வெளியீடு

 
முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து- அரசாணை வெளியீடு

தமிழ்த்தாய் வாழ்த்து முதலாவதாக கட்டாயம் பாடப்பட வேண்டுமென அரசாணை வெளியிடப்பட்டுள்ளது  

சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானம் மூலம் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், அரசு அலுவலகங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் நிகழ்ச்சிகளில் முதன்முதலில் 'தமிழ்த்தாய் வாழ்த்து' பாடுவது கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மனோன்மணியம் சுந்தரனாரால் 1891-இல் எழுதப்பட்ட "மனோன்மணீயம்" என்ற நாடக நூலின் பாயிரத்திலிருந்து எடுக்கப்பட்ட "தமிழ்த்தாய் வாழ்த்து" 1970 நவம்பர் 23 முதல் அரசு விழாக்களில் முதலில் பாடப்படவேண்டும் என அரசாணை வெளியிடப்பட்டு செயல்பாட்டுக்கு வந்துள்ளது. 2021 டிசம்பர் 17 முதல் மாநிலப் பாடலாக அதிகாரப்பூர்வ அங்கீகாரம் வழங்கப்பட்டு தமிழ்நாட்டில் அமைந்திருக்கும் அனைத்து கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்ட பொது அமைப்புகளின் நிகழ்ச்சிகளிலும் நிகழ்வு தொடங்குவதற்கு முன் தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம் பாடப்படும் என்று ஆணையிடப்பட்டுள்ளது.  தமிழ்நாட்டில் 1970-களில் இருந்து அனைத்து அரசு நிகழ்ச்சிகளிலும், கல்வி நிறுவனங்களிலும் "தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல்" முதலில் பாடப்படுவது மரபுத்தன்மையாகவும், பின்பற்றப்பட்டு வருகிறது.