தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்; சட்டமன்றத்தில் இன்று தனித்தீர்மானம் கொண்டு வரும் முதல் அமைச்சர் விஜய்.!!

 
1

தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில்; 

மனோன்மணியம் சுந்தரனாரால் 1891ல் எழுதப்பட்ட மனோன்மணியம் என்ற நாடக நூலில் இருந்து எடுக்கப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து, 1970ம் ஆண்டு நவம்பர் 23ம் தேதி முதல் அரசு விழாக்களில் முதலில் பாடப்பட வேண்டும் என்ற அரசாணை வெளியிடப்பட்டு, செயல்பட்டுக்கு வந்துள்ளது. 

2021ம் ஆண்டு டிசம்பர் 12ம் தேதி முதல் மாநிலப் பாடலாக அதிகாரப்பூர்வ அங்கீகாரம் வழங்கப்பட்டு, அனைத்து கல்வி நிறுவனங்கள், பல்கலை, அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் உள்பட பொது அமைப்புகளில் நிகழ்ச்சிகளிலும், நிகழ்வு துவங்குவதற்கு முன்பு தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம் பாடப்படும் என்று ஆணையிடப்பட்டுள்ளது. 

தமிழ்த்தாய் வாழ்த்து என்பது தமிழ்மொழிக்கும், தமிழர் பண்பாட்டிற்கும் செலுத்தப்படும் மரியாதையின் வெளிப்பாடாகும். இந்திய அரசியலமைப்பு வழங்கியுள்ள மொழி மற்றும் பண்பாட்டு உரிமைகளின் அடிப்படையில் தமிழகத்தின் பண்பாட்டு அடையாளத்தை நிலைநிறுத்தும் வகையில், தமிழகத்தில் நடக்கும் அரசு நிகழ்ச்சிகளில், நிகழ்வு துவங்குவதற்கு முன்பு தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம் முதலில் பாட வேண்டும் என்று சட்டசபையில் தனித்தீர்மானம் கொண்டு வரப்படுகிறது, 

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.