தமிழகத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் முதல் கட்ட சரிபார்ப்பு பணி நிறைவு
தமிழகத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதல் கட்ட சரிபார்ப்பு பணி நிறைவடைந்தது.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான முன்னேற்பாடுகளை தேர்தல் ஆணையம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இதன்படி, தேர்தலில் பயன்படுத்தபட உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் முதல் கட்ட சரிபார்ப்பு பணி கடந்த டிசம்பர் மாதம் 11ம் தேதி தொடங்கியது. மாவட்டங்களில் உள்ள வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கிடங்குகளில் இந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டது. அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் பெல் நிறுவன பொறியாளர்கள் இந்தப்பணியை மேற்கொண்டனர்.
சுமார் 30 நாட்களுக்கு மேல் நடைபெற்ற பணிகள் நேற்றுடன் ( ஜன 13) நிறைவுடைந்துள்ளது. இதன்படி, 1.75 லட்சம் வாக்குப்பதிவு இயந்திரங்கள், 1.10 லட்சம் கட்டுப்பாட்டு அமைப்புகள், 1.16 லட்சம் விவிபேட் இயந்திரங்களில் முதல் கட்ட சோதனை நிறைவு செய்யப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.


