”விஜய் அழைக்கிறார்”.... தவெகவினரின் பரபரப்பு சுவர் விளம்பரம்
தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் அரசியல் மாநாட்டிற்கான தேதி அதிகாரப்பூர்வ அறிவிக்கப்படாத நிலையில் அக்டோபர் 15 ஆம் தேதி நடைபெறுவதாக கப்பியாம்புலியூர் பகுதியில் சுவர் விளம்பரங்கள் வரையப்பட்டுள்ளன.
தமிழக வெற்றிக்கழகத்தினை தொடங்கிய நடிகர் விஜய்யின் முதல் அரசியல் மாநாடு செப்டம்பர் 23 ஆம் தேதி விக்கிரவாண்டி அருகே உள்ள வி.சாலை என்ற கிராமத்தில் நடத்துவதற்காக விழுப்புரம் காவல் துறையில் அனுமதி பெறப்பட்டன. அதன் பின்னர் மேடை அமைக்கபோதிய நாட்கள் இல்லை என்பதால் மாநாடு தேதி தள்ளிப்போவதாக தமிழக வெற்றிக்கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மாநாடு தேதி செப்டம்பர் 23 ஆம் தேதி நடைபெறுவதாக கப்பியாம்புலியூர், பனையபுரம், விக்கிரவாண்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சுவர் விளம்பரங்கள் கட்சி நிர்வாகிகளால் எழுதப்பட்டிருந்தன. இந்நிலையில் தமிழக வெற்றிக்கழகத்தின் மாநாடு செப்டம்பர் 23 ஆம் தேதி நடைபெறுவதாக கப்பியாம்புலியூர் பகுதியில் வரையப்பட்டிருந்த சுவர் விளம்பரங்களில் மாற்றம் செய்யப்பட்டு அக்டோபர் 15 ஆம் தேதி நடைபெறுவதாக சுவர் விளம்பரங்கள் வரையப்பட்ட்டுள்ளன.
மாநாட்டிற்கான தேதி தள்ளி வைக்கப்பட்ட நிலையிலும் மாநாடு அமைய உள்ள இடத்தில் எந்த வித எற்பாடுகள் செய்யாமலும் அதிகாரபூர்வ அறிவிப்பு இல்லாமல் சுவர் விளம்பரங்களில் அக்டோபர் 15 ஆம் தேதி நடைபெறுவதாக குறிப்பிடப்பட்டுள்ளன.தேதி தள்ளி போவதால் மாநாடு நடத்த குத்தகைக்கு எடுக்கப்பட்ட 85 ஏக்கர் நிலத்தின் உரிமையாளர்களிடம் தேதி மாற்றத்திற்கான ஒப்பந்தமும் வாங்கப்பட்டு வருகிறது. விழுப்புரம் மாவட்ட காவல துறையினரிடம் தமிழக வெற்றிக்கழகத்தின் நிர்வாகிகள் தேதி மாற்றத்திற்கான மனுவும் அளிக்கப்படாமல் உள்ளனர். எப்போது மாநாடு தேதி அறிவிக்கப்படும் மாநாடு நடத்தப்படுமென கட்சி நிர்வாகிகள் எதிர்பார்த்து காத்துள்ளனர்.