தவெக அரசின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர்: ஆளுநர் உரையில் மக்கல் நலனுக்காக இடம்பெற்ற முக்கிய அறிவிப்புகள்..!

 
1

ஆளுநர் உரையின் முக்கிய அம்சங்கள்

  • இருமொழிக் கொள்கை தொடர்ந்து பின்பற்றப்படும்
  • உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழி ஆக்குவதற்கு தொடர்ந்து வலியுறுத்தப்படும்
  • மாநிலத்தின் நிதி நிலைமை சீரமைக்கப்பட்டு தேர்தல் வாக்குறுதிகள் ஒவ்வொன்றாக வரும் ஆண்டுகளில் நிறைவேற்றப்படும்
  • தொழில் முதலீட்டை ஈர்க்க புதிய தொழில்கொள்கை விரைவில் அறிவிக்கப்படும்
  • ஒன்றிய அரசுக்குச் செலுத்திய வரிகளில் இருந்து தமிழ்நாட்டிற்கு உரிய நிதிப் பகிர்வுப் பங்கைத் தரக் கோரி தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்படும்.
  • இந்தத் தீர்மானத்தை நிறைவேற்றுவதோடு மட்டுமல்லாமல், நியாயமான நிதிப் பகிர்வைப் பெறுவதற்காக, இந்தப் பிரச்சினையை உச்ச நீதிமன்றம் வரை சட்டப்பூர்வமாகக் கொண்டு செல்ல ஒரு சிறப்புச் சட்டக் குழுவும் அமைக்கப்படும்
  • ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு சிறப்புப் போதைப்பொருள் தடுப்புப் படை அமைப்பதற்கான அரசாணைகளை அரசு வெளியிட்டுள்ளது. போதைப்பொருட்களின் நடமாட்டத்தை முற்றிலும் ஒழிப்பதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுத்து வருகிறது..
  • அனைத்துத் துறை சார்ந்த கொள்முதல்கள் மற்றும் ஒப்பந்தப் புள்ளிகள் எவ்வித ஒளிவுமறைவுமின்றி, கடுமையான கண்காணிப்பு வழிமுறைகளுக்கு உட்படுத்தப்படும்.

ஆளுநர் உரையில் மக்கல் நலனுக்காக இடம்பெற்ற முக்கிய அறிவிப்புகள் பற்றி பார்ப்போம்;

  • அரசு நிர்வாகத்தில் ஊழலுக்கு முடிவு
  • சாதிவாரி கணக்கெடுப்புக்கு வலியுறுத்தல்
  • விவசாயிகளுக்கு ரூ 6000 கோடி கடன் தள்ளுபடி
  • விவசாயத்திற்கு நவீன தொழில்நுட்ப ஆதரவு
  • இரு மொழிக் கொள்கை தொடரும்
  • தேசிய கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு
  • காலி பணியிடங்கள் நிரப்பப்படும்
  • காவிரி உரிமைக்காக சட்டப் போராட்டம் நடத்தப்படும்
  • மீனவர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு
  • முல்லைப் பெரியாறு உரிமையில் உறுதி.. சட்ட நடவடிக்கை தொடரும்
  • கீழடி ஆதிச்சநல்லூருக்கு யுனெஸ்கோ அங்கீகாரம்
  • 2036-க்குள் 1.5 மில்லியன் டாலர் பொருளாதாரம்
  • தமிழ்நாடு முதலீட்டு ஊக்குவிப்பு ஆணையம் துவங்கப்படும்
  • வறுமையற்ற தமிழகம் உருவாக்கப்படும்
  • 2031-க்குள் நகர்ப்புற வளர்ச்சியில் முன்னணி மாநிலமாக தமிழகத்தை மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்
  • அரசு நிர்வாகத்தில் செயற்கை நுண்ணறிவு(AI) பயன்படுத்தப்படும்..