மதுரை அருகே ரவுடி மீது துப்பாக்கிச்சூடு

 
ஸ்டிபன்

மதுரை செல்லூர் அருகே பல்வேறு குற்றவழக்குகளில் தொடர்புடைய ரவுடி ஸ்டீபன்ராஜை காவல்துறையினர் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர். 

மதுரை செல்லூர் அருகே குற்றவழக்குகளில் தொடர்புடைய ரவுடி ஸ்டீபன்ராஜ் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். தொடர் செயின் பறிப்பு சம்பவங்களில் ஸ்டீபன்ராஜ் ஈடுபட்டுவந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். ஸ்டீபன்ராஜை பிடிக்க முயன்றபோது காவல்துறையினரை தாக்க முயன்றதால் தற்காப்புக்காக சுட்டதில் படுகாயமடைந்தார். இதையடுத்து சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் ஸ்டீபன்ராஜ் அனுமதிக்கப்பட்டுள்ளார்.