பட்டாசு ஆலை விபத்து..மனம் வருந்தி பதிவிட்ட விஜய்..!!
விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்து காரணமாக 20 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
இந்நிலையில் இந்த விபத்து குறித்து அரசியல் தலைவர்கள் தங்களின் இரங்கல்களை தெரிவித்து வரும் நிலையில் தவெக தலைவர் விஜய் தன் இரங்கல்களை தெரிவித்து இருக்கின்றார். இதுகுறித்து அவர் பதிவிட்டவாறு, விருதுநகர் அருகே கட்டனார்பட்டியில் இருக்கும் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்து காரணமாக 20 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த செய்தியை கேட்டு மனம் வருந்துகிறது.
இந்த செய்தி மிகவும் மன வேதனையை தருகின்றது. உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். மேலும் விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருவோர் பூரண குணமடைய வேண்டும் என நான் வேண்டிக்கொள்கிறேன். உயிரிழந்தவர்களின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றேன் என பதிவிட்டார் தவெக தலைவர் விஜய்.
மேலும் அவரது பதிவில், தமிழக வெற்றிக்கழகத்தின் தலைமையிலான ஆட்சி, மக்களுக்கான உண்மையான ஆட்சி அமைந்தவுடன் பட்டாசு தொழிலாளர்களின் நலன் காக்க உயிரை நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் பதிவிட்டார் தவெக தலைவர் விஜய்.
விருதுநகர் அருகே, கட்டனார்பட்டியில், பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த செய்தியறிந்து மிகுந்த மன வேதனை அடைந்தேன். அவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
— TVK Vijay (@TVKVijayHQ) April 19, 2026
விபத்தில் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருபவர்கள்…