பட்டாசு ஆலை விபத்து- வன்னியரசு சகோதரி மீது வழக்கு
அமைச்சர் வன்னி அரசுவின் சகோதரிக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் நடந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில், பட்டாசு ஆலை மேலாளர் கைது செய்யப்பட்டார்.

சாத்தூர் அருகே ஒத்தையால் கிராமத்தில், அமைச்சர் வன்னி அரசின் சகோதரிக்கு சொந்தமானதாக கூறப்படும் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். மருந்து கலவை தயாரிக்கும் பணியில் ஈடுபட்ட மீனம்பட்டியை சேர்ந்த மாடசாமி என்பவர் பலியானார். வெடி விபத்து குறித்து சாத்தூர் தாலுகா போலீசார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக பட்டாசு ஆலை மேலாளர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அமைச்சர் வன்னி அரசின் சகோதரி ஜெயசக்தி, அவரது மகன் செல்வகுமாரி, மருமகன் முரளி சிவரன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விபத்துக்கான காரணம், பாதுகாப்பு நடைமுறைகள் உள்ளிட்டவை குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

