காரை ஓட்டிக்கிட்டே வானத்தில் பட்டாசு வெடித்து அராஜகம்..! மிரண்டுபோன வாகன ஓட்டிகள்!
குருகிராம் விரைவுச்சாலையில் விதிகளை மீறி ஆபத்தான முறையில் வாகனங்களை இயக்குவது தொடர்கதையாகி வரும் நிலையில், துவாரகா விரைவுச்சாலையில் (Dwarka Expressway) நள்ளிரவில் காரில் சென்றபடி இளைஞர்கள் சிலர் பட்டாசு வெடித்து ஸ்டண்ட் செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் அந்த வீடியோவில், ஹூண்டாய் (Hyundai) ரக கார் ஒன்று துவாரகா விரைவுச்சாலையில் அதிவேகமாகச் சென்று கொண்டிருக்கிறது. காரின் கண்ணாடிகள் முற்றிலும் கறுப்பு நிற ஒட்டுபடலத்தால் (Tinted Windows) மறைக்கப்பட்டுள்ளன. காரை ஓட்டிச் செல்லும் நபர், காரின் ஜன்னல் கண்ணாடியை இறக்கி, ஒரு கையால் ஸ்டீயரிங்கை பிடித்துக்கொண்டே, மற்றொரு கையால் 'ஸ்கை ஷாட்' (Sky shot) வகை பட்டாசைக் கொளுத்தி ஆகாயத்தை நோக்கிச் செலுத்துகிறார்.
அதே நேரத்தில், இந்த ஆபத்தான செயலை அப்படியே வீடியோ எடுப்பதற்காக மற்றொரு கார் அவர்களுக்குப் பின்னால் பின்தொடர்ந்து செல்கிறது. அந்த இரண்டாவது காரின் சன்ரூஃப் (Sunroof) வழியே வெளியே நின்றபடி ஒரு நபர் இச்சம்பவத்தைப் படம்பிடித்துள்ளார்.
சாலையில் பயணிக்கும் மற்ற வாகன ஓட்டிகளின் பாதுகாப்பிற்குப் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் இந்தச் சம்பவம் அமைந்துள்ளது. ஓடும் காரில் இருந்து பறந்து செல்லும் பட்டாசுகள், அருகில் செல்லும் பிற வாகனங்கள் மீது விழுந்திருந்தால் மிகக் கொடூரமான விபத்து ஏற்பட்டிருக்கக்கூடும்.
போக்குவரத்து விதிமீறல்கள் மற்றும் ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகப் போக்குவரத்துப் போலீசார் தெரிவித்து வரும் போதிலும், குருகிராம் விரைவுச்சாலையில் இதுபோன்று தொடர்ந்து அரங்கேறும் விபரீத ஸ்டண்ட்கள் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளிடையே அச்சத்தையும் கவலையையும் அதிகரித்துள்ளன.
गुरुग्राम के द्वारका एक्सप्रेसवे पर खतरनाक स्टंट! 🚨 चलती कार से पटाखे चलाने का वीडियो वायरल हो रहा है। दिवाली से पहले इस तरह की लापरवाही सड़क पर चल रहे अन्य लोगों की जान को भी खतरे में डाल सकती है। वीडियो वायरल होने के बाद पुलिस ने मामले की जांच शुरू कर दी है। #Gurugram #Viral https://t.co/D102lWuQH4
— Journalist Ravendra kumar (@Chhotukingoffi1) November 5, 2026