பள்ளிக்கு அருகில் பட்டாசு குடோன்
Jun 19, 2026, 18:02 IST1781872329543
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் நடிகை ஸ்ரீதேவியின் குடும்பத்திற்கு சொந்தமான பள்ளியின் அருகே செயல்பட்டு வந்த பட்டாசு மூலப்பொருள் குடோன், மாணவர்கள் நலன் கருதி அகற்றப்பட்டது.
சிவகாசியில் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் குடும்பத்திற்கு சொந்தமான பள்ளியையொட்டி பட்டாசு மூலப் பொருட்கள் தயாரிப்பு குடோன் செயல்பட்டு வந்தது. விபத்து ஏற்பட்டால் பள்ளி மாணவ, மாணவியருக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் அபாயம் இருப்பதாக பெற்றோர் அளித்த புகாரின் பேரில் குடோனை காவல்துறையினர் அப்புறப்படுத்தினர்.

