ராஜேந்திரபாலாஜி கைதுக்கு எதிர்ப்பு- திமுக உறுப்பினர் அட்டையை திருப்பி அனுப்பிய பட்டாசு உற்பத்தியாளர்

 
rajendra balaji

சிவகாசி அருகே உள்ள மீனம்பட்டி கிராமம் ராமசாமி புரத்தில் வசிப்பவர் விநாயகமூர்த்தி. திமுக பாரம்பரிய குடும்பத்தைச் சேர்ந்த இவர், கடந்த 15 ஆண்டுகளாக திமுக உறுப்பினராக உள்ளார். மற்றும் மீனம்பட்டி பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்க தலைவராகவும் பொறுப்பில் உள்ளார். இந்நிலையில் பண மோசடி வழக்கில் அதிமுக ஆட்சியின்போது பால்வளத்துறை அமைச்சராக இருந்த ராஜேந்திர பாலாஜி மீது விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்து பல நாட்களாக தப்பி ஓடிய அவரை தேடுதல் வேட்டை நடத்தி கர்நாடகாவில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

திருச்சி சிறையில் ராஜேந்திர பாலாஜி

தமிழக அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள பட்டாசு உற்பத்தியாளர் விநாயகமூர்த்தி தனது திமுக உறுப்பினர் அடையாள அட்டையை திமுக தலைமைக் கழகத்திற்கு திரும்ப அனுப்பி சரண்டர் செய்ததுடன் திமுகவில் இருந்து விலகி கொள்வதாக  கடிதம் எழுதி அனுப்பியுள்ளார். பட்டாசு தொழிலுக்கு கடந்த சில வருடங்களாக ஏற்பட்டுள்ள கடுமையான நெருக்கடியை தீர்க்க மத்திய அரசோ மாநில அரசோ எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காத பட்சத்தில் முந்தைய அதிமுக ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருந்த விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த ராஜேந்திர பாலாஜி பட்டாசு தொழிலுக்கு, தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு அரணாக விளங்கியதாகவும், ஆனால் தற்போதைய திமுக தலைமையிலான திமுக அரசு உள்நோக்கத்துடன் செயல்பட்டு அவரை பண மோசடி வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்திருப்பது வருந்தத்தக்கதாகும் எனவும் விநாயகமூர்த்தி தெரிவித்துள்ளார்.