தமிழகம் முழுவதும் பட்டாசு வெடித்து 23 விபத்துக்கள்- தீயணைப்புத்துறை

 
ச் ச்

தீபாவளி பண்டிகையையொட்டி நேற்று முதல் தற்போது வரை தமிழகம் முழுவதும் பட்டாசு வெடித்து 23 விபத்துக்கள் நடந்துள்ளதாக தீயணைப்பு துறை தகவல் தெரிவித்துள்ளது.

பட்டாசு ஆலையில் பயங்கர விபத்து; தீப்பிழம்பான நகரம்... 6 பேர் பலி, 60 பேர்  படுகாயம்! | 6 dead 60 injured after fire blasts in madhya pradesh crackers  factory - kamadenu tamil


நாட்டு பட்டாசு வெடித்து ஏற்பட்ட விபத்தின் காரணமாக ஆவடியை அடுத்து பட்டாபிராம் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். தமிழ்நாடு முழுவதும் 14 பேர் பட்டாசு வெடித்து காயம் ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழ்நாட்டில் தீபாவளி பண்டிகை முன்னிட்டு பட்டாசு வெடி விபத்து காரணமாக தீயணைப்பு துறைக்கு இதுவரை 23 அழைப்புகள் வந்துள்ளன. ராக்கெட் பட்டாசு மூலம் ஏற்பட்ட தீ விபத்து மற்றும் வானவேடிக்கை பட்டாசுகள் மூலம் ஏற்பட்ட தீ விபத்து 11. மற்ற வகையான பட்டாசுகள் மூலம் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக ஏற்பட்ட தீ விபத்து குறித்தான அழைப்புகள் 12. இதில் சென்னையில் இருந்து மட்டும் 4 அழைப்புகள் வந்தன 3 அழைப்புகள் மற்ற வகையான பட்டாசு மூலம் ஏற்பட்ட தீ விபத்து மற்றும் ராக்கெட் பட்டாசு மூலம் 1 தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 

தமிழ்நாட்டில் இதுவரை தீபாவளி பட்டாசு விபத்து காரணமாக 14 பேர் காயம் ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னையை அடுத்த ஆவடி பட்டாபிராம் பகுதியில் ஏற்பட்ட நாட்டு பட்டாசு வெடித்து ஏற்பட்ட விபத்து காரணமாக நான்கு பேர் உயிரிழந்தனர்.