பேங்க் ஆப் இந்தியா வங்கிக் கிளையில் தீ விபத்து!!

 
tn

சென்னை சாந்தோமில் உள்ள பேங்க் ஆப் இந்தியா வங்கிக் கிளையில் மின் கசிவு காரணமாக திடீர் தீ விபத்து ஏற்பட்டது.

fire accident at Bank of India branch in Chennai

சென்னை சாந்தோம் பகுதியில் அடுக்குமாடி கட்டிடத்தில் பேங்க் ஆப் இந்தியா வங்கி கிளை செயல்பட்டு வரும் நிலையில் தரைத்தளத்தில் வங்கியும் மற்ற இரண்டு தளங்களில் இரண்டு குடும்பமும் வசித்து வருகிறது.  இந்த சூழலில் இன்று அதிகாலை வங்கி கிளையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இது குறித்து உடனடியாக அப்பகுதி மக்கள் தீயணைப்பு துறைக்கும் ,காவல்துறைக்கும் தகவல்  தெரிவித்தனர்.

fire accident at Bank of India branch in Chennai

மயிலாப்பூர்,  அசோக் நகர் உள்ளிட்ட இடங்களில் இருந்து நான்கு வாகனங்களில் தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை அணைத்தனர்.  மின்கசிவு காரணமாக வங்கியில் தீ விபத்து ஏற்பட்டதாக போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கியில்  ஏற்பட்ட திடீர் தீ விபத்தினால் ஏசி, கணினி உள்ளிட்ட பொருட்கள் சேதமடைந்துள்ளன.