சென்னை ஜி.பி.சாலையில் பயங்கர தீ விபத்து..!
Apr 2, 2026, 18:06 IST1775133381257
சென்னை ஜி.பி சாலையில், எல்.ஐ.டி கட்டடத்திற்கு அருகில் உள்ள தனியார் தனியார் கார் உதிரி பாகங்கள் விற்பனை அங்காடி கட்டடத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மதியம் 3.30 மணி அளவில், கட்டிடத்தின் மேல்தளத்தில் தகர சீட் போடப்பட்டுள்ள குடோனில் தீ பற்றியுள்ளது.
இதனையடுத்து அந்தக் கட்டத்தில் உள்ளவர்கள் அலறியடித்துக் கொண்டு வெளியேறினர். மேலும் காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவலைத் தொடர்ந்து பல்வேறு இடங்களில் இருந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் இந்தப் பகுதியை கரும்புகை சூழ்ந்துள்ளது.

