திருவள்ளூர் அருகே சரக்கு ரயிலில் பயங்கர தீ விபத்து..!! ரயில் பெட்டிகள் வெடித்துச் சிதறுவதால் பதற்றம்..!
திருவள்ளூர் அருகே ஏகாட்டூரில் சரக்கு ரயிலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
சென்னை மணலியில் இருந்து ஜோலார்பேட்டைக்கு எரிபொருள் ஏற்றிச் சென்ற சரக்கு ரயில், திருவள்ளூர் அருகே ஏகாட்டூரில் இன்று அதிகாலை 5.20 மணியளவில் திடீரென தீ பிடித்து எரிந்தது. சரக்கு ரயில் பெட்டிகளில் எரிபொருள் இருந்ததால் , அடுத்தடுத்து தீ மளமளவென பரவி கொளுந்துவிட்டு எரியத் தொடங்கியது. 6 ரயில் பெட்டிகளில் இருந்த எரிபொருள்கள் தீ பிடித்து எரிந்ததால், அப்பகுதி முழுவதும் புகை சூழ்ந்து காணப்படுகிறது.

இதனால் திருவள்ளூர் ஏகாட்டூரைச் சுற்றிய 10 கிலோ மீட்டர் பரப்பளவிற்கு புகையின் தாக்கல் உணரப்பட்டது. இதனால் சுற்று வட்டாரங்களைச் சேர்ந்த மக்கல் மூச்சுத் திணறக் உள்ளிட்ட சிரமங்களுக்கு உள்ளாகினர். ரயில் தடம் புரண்டதால் தீ விபத்து நேரிட்டதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் பல மணி நேரமாக போராடி வருகின்றனர். இருப்பினும் டீசல் உள்ள ரயில் பெட்டிகள் வெடித்துச் சிதறுவதால் பதற்றமான சூழல் நிலவுகிறது.
தீவிபத்தைத் தொடர்ந்து சென்னை – அரக்கோணம் வழித்தடத்தில் இரு மார்க்கத்திலும் ரயில்கள் நிறுத்தப்பட்டுள்ளது. சென்னை திருவள்ளூரில் இருந்து மட்டும் புறநகர் ரயில்கள் வழக்கம்போல இயக்கப்பட்டுள்ளது. அதேபோல் மங்களூரு செல்ல இருந்த எக்ஸ்பிரஸ் ரயில் திருவள்ளுரில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
#BREAKING Train services between #Arakkonam and #Chennai have been halted due to a fire accident involving a goods train near #Tiruvallur, where the fire has spread to five wagons. This incident has caused significant disruption, blocking all trains passing through Tiruvallur.… pic.twitter.com/9S1d4yupFl
— Mahalingam Ponnusamy (@mahajournalist) July 13, 2025