சென்னை நட்சத்திர ஓட்டலில் தீ விபத்து..! கிராண்ட் மாஸ்டர் போட்டி ஒத்திவைப்பு..!
Aug 7, 2025, 04:45 IST1754522125000
தேனாம்பேட்டையில் உள்ள நட்சத்திர விடுதியில், நேற்று முன்தினம் நள்ளிரவு 9-வது மாடியில் மின் கசிவு காரணமாகத் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.தீ விபத்தின்போது, விடுதியில் தங்கியிருந்த அனைத்து செஸ் வீரர்களும் உடனடியாக பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். அவர்கள் அனைவரும் மற்றொரு விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
ஆகஸ்ட் 6 முதல் ஆகஸ்ட் 15 வரை நடைபெற இருந்த இந்த கிராண்ட் மாஸ்டர் செஸ் போட்டியின் நேற்றைய முதல் நாள் ஆட்டங்கள் அனைத்தும் இன்றைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன. மேலும் ஆகஸ்ட் 11-ஆம் தேதி போட்டியின் ஓய்வு நாளாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அன்றைய தினமும் போட்டிகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தீ விபத்தால், செஸ் வீரர்கள் யாருக்கும் எந்தவிதப் பாதிப்பும் ஏற்படவில்லை.



