கும்மிடிப்பூண்டி சிப்கார் தொழிற்பேட்டையில் தீ விபத்து..!!
கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் பழைய டயர்கள் சேமிப்பு கிடங்கில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயை கட்டுப்படுத்தும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சிப்காட் தொடற்பேட்டையில் பழைய டயர்கள் சேமிப்பு கிடங்கில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது . சிப்காட் தொழிற்பேட்டையில் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் மற்றும் சேமிப்பு கிடங்குகள் இயங்கி வருகின்றன. செந்தில்குப்பம் பகுதியில் அமைந்துள்ள பழைய டயர்கள் சேமிப்பு கிடங்கில் , டயர்களில் இருந்து இரும்பு கம்பிகளை பிரித்தெடுக்கும் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதில் பத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில் இன்று அதிகாலை பழைய டயர்களில் திடீரென பற்றிய தீ , கொழுந்து விட்டு எறியத் தொடங்கியது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சியடித்து சுமார் 3 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயை அணைத்தனர். மேலும் பழைய டயர்கள் எரிந்ததால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றத்துடன் புகை சூழ்ந்ததால் , அப்பகுதி மக்கள் கண் எரிச்சல் மற்றும் மூச்சு திணறலால் பாதிக்கப்பட்டனர். அதிகாலையில் தீ விபத்து ஏற்பட்டதால் நல்வாய்ப்பாக ஊழியர்கள் உயிர் தப்பினர்.
Fire breaks out at a scrap iron storage warehouse in #Gummidipoondi SIPCOT Industrial Estate.
— TNIE Tamil Nadu (@xpresstn) July 18, 2025
🎥ANI pic.twitter.com/RIgCJGu4zq


