சாலையில் சென்று கொண்டிருந்த ஷேர் ஆட்டோ திடீரென தீ பற்றி எறிந்ததால் பரபரப்பு

 
share auto

சென்னை அருகே அம்பத்தூரில் சாலையில் சென்று கொண்டிருந்த ஷேர் ஆட்டோ திடீரென தீ பற்றி எறிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 


சென்னை அம்பத்தூர் பகுதியில் உள்ள வாவின் அருகே பயணிகளுடன் சேர் ஆட்டோ (டாட்டா ஏசி) சென்றபோது திடீரென புகை வந்து வாகனம் தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. திடீரென தீப்பிடிக்கவே சுதாரித்துக் கொண்ட ஓட்டுனர் பயணிகள் உடனடியாக வாகனத்தை விட்டு வெளியேறியதால் யாருக்கும் எந்த விபத்தும் ஏற்படவில்லை.

திடீரென ஏற்பட்ட இந்த தீ விபத்தால் அருகில் உள்ளவர்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கவே சம்பவ இடத்திற்கு விரைந்து  வந்த அம்பத்தூர் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள்.  மேலும் இந்த சம்பவம் குறித்து அம்பத்தூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திடீரென சாலையில் வாகனம் தீப்பிடித்து எரிந்ததால் அப்பகுதியில் சற்று பரபரப்பாக காணப்பட்டது.