#BREAKING ஆற்று மணல் குவாரி முறைகேடு- முதல் குற்றவாளியாக துரைமுருகன் மீது வழக்குப்பதிவு
துரைமுருகன் மீது லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்துள்ள வழக்கின் FIR வெளியாகியுள்ளது.

துரைமுருகன் மீது லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்துள்ள வழக்கின் FIR வெளியாகியுள்ளது. ஆற்று மணல் குவாரி முறைகேடு புகாரில் முன்னாள் அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்ட 27 பேர் மீது தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை (DVAC) வழக்குப்பதிவு செய்துள்ளது. சட்டவிரோதமாக மணல் அள்ளி, அரசுக்கு ரூ.1,427 கோடி இழப்பு ஏற்படுத்தியதாகவும், மணல் எடுத்து செல்வதற்கான அனுமதி சீட்டுகளை போலியாக தயாரித்ததாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, டெண்டர் முறைகேடுகளும் நடந்துள்ளன.
தமிழகத்தில் 2021-2024 காலகட்டத்தில் 4 குவாரிகளில் மட்டும் அரசுக்கு ரூ.1,427.34 கோடி வருவாய் இழப்பு என FIR-ல் குறிப்பிடப்பட்டுள்ளது. 18 அரசு அதிகாரிகள் ம 9 தனி நபர்கள் மீது குற்றச்சாட்டுக்கள் முன் வைக்கப்பட்டுள்ளன. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 34 இடங்களில் சோதனை நடத்தப்பட்டு 825 ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடதக்கது.

