#JUST IN : எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீது போடப்பட்டுள்ள வழக்குகள் குறித்த FIR வெளியீடு..!

 
1

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீது போடப்பட்டுள்ள வழக்குகள் குறித்த முதல் தகவல் அறிக்கை வெளியீடு .


தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் திமுக மாநில இளைஞரணிச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் மீது காவல்துறையினர் 9 சட்டப் பிரிவுகளின் கீழ் அதிரடியாக வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

 

 

பதிவு செய்யப்பட்டுள்ள முக்கிய சட்டப் பிரிவுகள்:

பாரதீய நியாய சன்ஹிதா (BNS), பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டம் என மொத்தம் 9 வெவ்வேறு சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது:

  1. BNS Section 196: மத, இன, மொழி ரீதியாகப் பகைமையை உருவாக்குதல்.

  2. BNS Section 192: கலவரத்தை தூண்டும் நோக்கில் செயல்படுதல்.

  3. BNS Section 352: அமைதியைச் சீர்குலைக்கும் வகையில் intentionally அவமதித்தல்.

  4. BNS Section 79: பெண்ணின் கண்ணியத்தைக் குறைக்கும் வகையில் செயல்படுதல்/பேசுதல்.

  5. BNS Section 296(b): பொது இடத்தில் ஆபாசமாகப் பேசுதல்.

  6. BNS Section 61: குற்றச் சதி (Criminal Conspiracy).

  7. BNS Section 351(2): குற்றவியல் மிரட்டல் (Criminal Intimidation).

  8. TN Prohibition of Harassment of Woman Act (Sec 4): பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டம்.

  9. Information Technology Act (Sec 67): மின்னணு ஊடகங்கள் மூலம் ஆபாசமான/அவதூறு தகவல்களைப் பரப்புதல்.