சொத்து விபரங்களை மறைத்த ஓபிஎஸ், அவரது மகன் ரவீந்தரநாத் மீது பாயும் வழக்கு!

 
ops

சட்டமன்ற, நாடளுமன்ற தேர்தலின் போது தவறான தகவல் அளித்ததாகவும், சொத்து விபரங்களை மறைத்தாக கூறி மீலானி என்பவர் தாக்கல் செய்த வழக்கில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர் செல்வம் மற்றும் அவரது மகனான தேனி தொகுதி நாடளுமன்ற உறுப்பினர் ரவீந்தரநாத் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய தேனி மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

OP Ravindranath Kumar | Malayalam News

தேனி மாவட்டம் காட்டுநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் மீலானி, முன்னாள் தேனி மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளரான இவர் தேனி மாவட்ட சட்டமன்ற, நாடளுமன்ற உறுப்பினர்கள் மீதான வழக்கினை விசாரிக்கும் நீதிமன்றத்தில் முன்னாள் துணை முதல்வரும், தற்போதைய அதிமுக ஒருங்கிணைப்பாளரும், போடிநாயக்கனூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஒ.பன்னீர் செல்வம் மீதும், தேனி தொகுதி நாடளுமன்ற உறுப்பினரும், ஒ.பன்னீர் செல்வத்தின் மகனுமாக ரவீந்தரநாத் மீது புகார் மனு அளித்திருந்தார். 

அந்த மனுவில் 2019 ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலின் போது அதிமுக சார்பாக போட்டியிட்ட ரவீந்தரநாத் தனது வேட்புமனுவில் தவறான தகவல்களை தந்துள்ளதாகவும், தனது சொத்து விபரங்களை மறைத்து உள்ளார் என்றும், இதே போல் 2021 நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போடிநாயக்கனூர் தொகுதியில் போட்டியிட்ட ஒ.பன்னீர் செல்வம் தனது வேட்பு மனுவில் தவறான தகவல்களை தந்ததாகவும் தனது சொத்து விபரங்களை மறைத்தாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியிருந்தார்.

இந்த நிலையில் இந்த வழக்கின் மீதான விசாரணையில் நீதிபதி, ஒ.பன்னீர் செல்வம் மற்றும் அவரது மகனான தேனி தொகுதி நாடளுமன்ற உறுப்பினர் ரவீந்தரநாத் மீது உடனடியாக தேனி மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் FIR பதிவு செய்ய நீதிபதி உத்திரவிட்டார், மேலும் இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணையான பிப்ரவரி 7ம் தேதிக்குள் இது தொடர்பான விசாரணை அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும், மேலும் மனுதாரர் சாதாரண குடிமகன் என்பதால் அவருக்கு அச்சுறுத்தல் ஏற்பட வாய்ப்பு உள்ளதும் என்றும்,எனவே அவருக்கு காவல்துறை பாதுகாப்பு வழங்கவும் நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணை அடுத்த மாதம் 7ம்  தேதி நடைபெற உள்ளது.