உடனே இந்த வேலையை முடிச்சிடுங்க..! ஆதார் அட்டையுடன் பான் எண்ணை இணைக்க கடைசி நாள் இது தான்..!

 
1 1

நாட்டில் உள்ள பெரும்பாலானோர் தங்களது ஆதார் மற்றும் பான் எண் இணைப்பு நடவடிக்கையை ஏற்கனவே முடித்திருப்பார்கள். ஆனல், இதுவரை செய்யாதவர்களுக்கு, டிச. 31 கடைசி நாள். இந்திய வருமான வரித்துறை, பான் கார்டு வைத்திருக்கும் அனைவரும் தங்களது ஆதார் கார்டுடன் பான் எண்ணை இணைத்து விட வேண்டும் என்று கேட்டுக் கொண்டுளள்து. இதற்கான கடைசி தேதி டிச. 31, 2025 ஆகும். ஆனால், இதற்குள் ஆதார் அட்டையுடன் பான் எண்ணை இணைக்கத் தவறினால் உங்களது பான் எண் செயல்படாததாக மாறிவிடும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஆதார் எண்ணுடன் பான் எண்ணை (நிரந்தர கணக்கு எண்) இணைக்க மத்திய அரசு பல முறை காலக்கெடுவை நீட்டித்துள்ள நிலையில், இதுவே கடைசி முறை என்று கூறப்படுகிறது. அது மட்டுமல்லாமல், இதுவரை ஆதார் எண்ணுடன் பார் எண்ணை இணைக்காதவர்கள் தற்போது இணைக்கும் முன் அதற்குரிய அபராதமாக ரூ.1000 செலுத்த வேண்டும். அதே வேளையில், 2024ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 1ஆம் தேதிக்குப் பிறகு, பான் அட்டை வாங்கியவர்கள், டிச. 31ஆம் தேதி வரை இலவசமாகவே ஆதார் அட்டையுடன் இணைத்துக் கொள்ளலாம்.

பான் எண்ணை இணைக்காவிட்டால் ஆதார் எண்ணுடன் இணைக்கப்படாத பான் எண் செல்லாததாகிவிடும். அதனால், ஒருவர் செலுத்திய வரி மற்றும் வரி பிடித்தங்கள் மீண்டும் வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்து பெற முடியாது. ஏற்கனவே பிரிவு எக்ஸ்விஜேஜே-பி மற்றும் எக்ஸ்விஜேஜே-பிபி-ன் கீழ் ஒருவர் வரி செலுத்தி வந்தால், பான் எண் செல்லாததாக மாறும்போது, இனி முறையே 206ஏஏ மற்றும் 206சிசி -ன் கீழ் அதிக வரி பிடித்தம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.