மார்ச் 31-க்குள் இதை முடிச்சிடுங்க..! இல்லைனா கேஸ் சிலிண்டர் வராது..!

 
Gas

மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், அனைத்து உள்நாட்டு எல்பிஜி (LPG) நுகர்வோரும் தங்களது பயோமெட்ரிக் ஆதார் அங்கீகாரத்தை (e-KYC) பூர்த்தி செய்வது தற்போது அவசியம் ஆக்கப்பட்டுள்ளது. இதற்காக நீங்கள் கேஸ் அலுவலகத்திற்கு சென்று நீண்ட வரிசையில் நிற்க வேண்டிய அவசியமில்லை. உங்கள் எரிவாயு நிறுவனத்தின் (Indane, HP, அல்லது Bharat Gas) அதிகாரப்பூர்வ மொபைல் ஆப் மற்றும் Aadhaar FaceRD ஆப் ஆகியவற்றை பயன்படுத்தி, உங்கள் வீட்டிலிருந்தே முக அங்கீகாரம் (Face Authentication) மூலம் இந்த சரிபார்ப்பை எளிதாக செய்து முடிக்கலாம்.

ஒருவேளை உங்களால் ஆன்லைனில் செய்ய முடியாவிட்டால், உங்கள் எல்பிஜி விநியோகஸ்தரை நேரில் அணுகியும் இதை செய்து கொள்ளலாம். இது குறித்து மேற்கொண்டு முழுமையாக தெரிந்து கொள்ள https://pmuy.gov.in/e-kyc.html என்ற அதிகாரப்பூர்வ தளத்தை பார்க்கலாம். அதுவும் இல்லையேல் கட்டணமில்லா உதவி எண் ஆன (Toll-Free): 1800 2333 555 என்ற எண்ணை தொடர்பு கொண்டும் தெரிந்து கொள்ளலாம்.

இந்த இ-கேஒய்சி (e-KYC) நடைமுறையானது, எரிவாயு இணைப்புகள் உண்மையான பயனாளர்களை சென்றடைவதை உறுதி செய்யவும், முறைகேடுகளை தவிர்க்கவும், மானிய பலன்கள் தடையின்றி கிடைக்கவும் வழிவகை செய்கிறது. ஆக உங்களுடைய மொபைலில் இருந்தே ஆதார் ஃபேஸ் ஆர் டி ஆப் மூலம் அல்லது மற்ற ஆப்கள் மூலம் அப்டேட் செய்யலாம்.

Step 1: முதலில் உங்களுடைய ஸ்மார்ட்போனில் Play Store சென்று Aadhaar FaceRD (UIDAI வெளியீடு) ஆப்பை இன்ஸ்டால் செய்யவும். அதன் பிறகு பிறகு, உங்கள் கேஸ் நிறுவனத்திற்கு உரிய ஆப்பை (உதாரணமாக IndianOil One) தரவிறக்கம் செய்து, உங்கள் நுகர்வோர் எண் (Consumer ID) அல்லது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் மூலம் லாக்-இன் செய்யவும்.

Step 2: ஆப்பிற்குள் சென்றதும், மெனுவில் அல்லது ப்ரொபைல் பகுதியில் Re-eKYC அல்லது Aadhaar e-KYC என்ற விருப்பத்தை தேர்ந்தெடுக்கவும். அங்கே உங்கள் ஆதார் எண்ணை உள்ளிட்டு, விதிமுறைகளை ஏற்றுக் கொண்டு Face Scan கொடுக்கவும்.

Step 3: இப்போது தானாகவே Aadhaar FaceRD கேமரா திரையில் தோன்றும். நீங்கள் நேராக கேமராவை பார்த்து, கண்ணை ஒரு முறை இமைக்கவும். முகத்தை மிக அருகிலோ அல்லது தூரத்திலோ வைக்காமல் சரியான வட்டத்தில் இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும். முகம் சரியாக பொருந்தினால், பச்சை நிறத்தில் டிக் மார்க் வரும். இதை செய்யும் போது நல்ல வெளிச்சம் உள்ள இடத்தில் இருக்கவும்.

Step 4: ஸ்கேன் முடிந்ததும், உங்கள் ஆதார் விவரங்கள் திரையில் தோன்றும். கடைசியாக Submit பட்டனை அழுத்தினால், உங்கள் e-KYC கோரிக்கை ஏற்க பட்டுவிடும். சில நாட்களில் உங்கள் ஸ்டேட்டஸ் அப்டேட் ஆகிவிடும்.