கூகுள் பே உள்ளிட்டவற்றில் UPI பணம் செலுத்த இனி கைரேகை போதும்!

 
ச்

Google Pay, PhonePe, BHIM 2 UPI செயலிகளில் கைரேகை அல்லது முகஅடையாளம் வைத்து பணம் செலுத்தும் வசதி கிடைக்கிறது.

Google Pay, PhonePe, BHIM 2 UPI செயலிகளில் கைரேகை அல்லது முகஅடையாளம் வைத்து பணம் செலுத்தும் வசதி கிடைக்கிறது. ரூ. 5,000 வரையிலான UPI பரிவர்த்தனைகளுக்கு, 4 அல்லது 6 இலக்க UPI PIN-க்கு பதிலாக கைரேகை அல்லது முகஅடையாளத்தைப் பயண்படுத்தலாம். இந்த வசதியை ஒவ்வொரு UPI செயலியிலும், தகுதியான வங்கிக் கணக்கிற்கு தனியாக செயல்படுத்த வேண்டும்.

வசதியை இயக்கும்போது ஒருமுறை UPI PIN மூலம் சரிபார்ப்பு செய்ய வேண்டும்; அதன் பிறகு தகுதியான பரிவர்த்தனைகளில் பயோமெட்ரிக் மூலம் பணம் செலுத்தலாம். ரூ.5,000-க்கு மேற்பட்ட பரிவர்த்தனைகளுக்கு வழக்கமான UPI PIN தொடர்ந்து தேவைப்படும். கைரேகை அல்லது முகஅடையாள சரிபார்ப்பு தோல்வியடைந்தால், UPI PIN மூலம் பணம் செலுத்தும் வசதி தொடரும்.