ரயில் பயணத்தில் சப்தமாக செல்போனில் பாடல் கேட்டால் அபராதம்

 
ட்

ரயில் பயணத்தில் சப்தமாக செல்போனில் பாடல் கேட்டால் அபராதம் விதிக்கப்படும் என ரயில்வே எச்சரிக்கை விடுத்துள்ளது. 

train

நாடு முழுவதும் தினமும் கோடிக்கணக்கான மக்கள் ரயில்களில் பயணம் செய்கின்றனர். ரயில்களை பொறுத்தவரையில், குடும்பமாக, நண்பர்களாக, தனிநபராக என பலரும் தங்களுக்கு ஏற்றவாறு பயணம் செய்து வருகின்றனர். ரயில் பயணத்தின்போது கூச்சலிடுவது, அதீத சத்தமாக பேசுவது, செல்போனில் சத்தமாக பாடல்களை கேட்பது உள்ளிட்டவைகள் வாடிக்கையாக இருந்து வருகிறது. இதனால் மற்ற பயணிகளும் சிரமத்துக்குள்ளாகியுள்ளனர். ரயில்களில் பாடல்கள் கேட்கும்போது சக பயணிகளுக்கு இடையூறு ஏற்படும் வகையில் அதிக சத்தமாக பாடல்கள் கேட்க கூடாது. 'ஹெட்செட்' மூலம் கேட்க வேண்டும். செல்போனில் பேசும்போது மெதுவாக பேச வேண்டும். செல்போனில் அழைப்பு வருவதற்கான சத்தத்தை குறைந்த அளவில் வைக்க வேண்டும் என தொடர்ச்சியாக பயணிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் ரயில் பயணங்களின்போது செல்போனில் அதிக சப்தத்துடன் பாடல் கேட்டாலோ, சப்தமாக செல்போனில் பேசினாலோ அபராதம் விதிக்கப்படும் என ரயில்வே எச்சரிக்கை விடுத்துள்ளது. அத்துமீறுவோர் குறித்து சக பயணிகள் புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.