நிதி முறைகேடு - 2 பேர் பதவி நீக்கம்
நிதி முறைகேடு தொடர்பாக 2 ஊராட்சி மன்ற தலைவர்கள், 2 துணை தலைவர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம் குருந்தன்கோடு ஊராட்சி ஒன்றியத்தில் ஊரக வளர்ச்சித் திட்டப் பணிகளில் முறைகேடு நடந்ததாக வந்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில் விதிமீறல் உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, ஊராட்சி ஒன்றிய உதவி பொறியாளர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். முறைகேடுகளுக்கு எந்தவித சமரசமும் இல்லை, தவறு செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை தொடரும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
இதேபோல் நிதி முறைகேடு தொடர்பாக 2 ஊராட்சி மன்ற தலைவர்கள், 2 துணை தலைவர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு உட்பட்ட வேண்பாக்கம் மற்றும் வைப்பூர் ஊராட்சியில் நிதி முறைகேட்டை அடுத்து ஆட்சியர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

