மின்சாரம் தாக்கி உயிரிழந்த சிறுவனின் பெற்றோருக்கு நிதியுதவி

 
stalin

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே திருராமேஸ்வரம் கிராமம், கோட்டகச்சேரியில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சிறுவனின் பெற்றோருக்கு  நிதியுதவியை முதலமைச்சர்  ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

mk stalin

இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் வட்டம், திருராமேஸ்வரம் கிராமம், கோட்டகச்சேரி பகுதியிலுள்ள கோவில் திருவிழாவிற்கு விளம்பரப் பதாகைகள் வைப்பதற்காக கடந்த 29.06.2024 அன்று இரவு சுமார் 11.30 மணியளவில் அக்கிராமத்தைச் சேர்ந்த சிறுவன் மதன்ராஜ் (வயது 15) த/பெ.ராமதாஸ் என்பவர் விளம்பரப் பதாகைகளை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்லும்போது எதிர்பாராதவிதமாக அருகிலுள்ள மின்மாற்றியில் இரும்பு கம்பியுடன் கூடிய விளம்பர பதாகையில் உராய்வு ஏற்பட்டதன் காரணமாக மின்சாரம் தாக்கியதில் பலத்த காயம் ஏற்பட்டு சிகிச்சைக்காக மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வருத்தமும் வேதனையும் அடைந்தேன்.

stalin

மேலும், இவ்விபத்தில் காயமடைந்து மன்னார்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் சிறுவன் ரூபன் (வயது 19) தபெமாரியப்பன் என்பவருக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன். இந்த விபத்தில் உயிரிழந்த சிறுவனின் பெற்றோருக்கும், அவரது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்த சிறுவனின் பெற்றோருக்கு இரண்டு இலட்சம் ரூபாயும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் சிறுவனின் பெற்றோருக்கு ஐம்பதாயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து உத்தரவிட்டுள்ளேன் என்று குறிப்பிட்டுள்ளார்.