அமராவதி ஆற்றில்மூழ்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவி!!

 
stalin

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தெற்கு கிராமத்தில் அமராவதி ஆற்றில் நீரில் மூழ்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு   முதலமைச்சர் ஸ்டாலின்  நிதியுதவியை அறிவித்துள்ளார்.

stalin

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மதுரை மாவட்டம், ஆலங்குளத்தைச் சேர்ந்த திரு.பாக்கியராஜ் (வயது 39) த/பெ.ராமசாமி, திரு.சின்ன கருப்பு (வயது 31) த/பெ.இராமலிங்கம் மற்றும் சிறுவன் ஹரி (வயது 16) த/பெ.அய்யனார் ஆகிய மூவரும் சுற்றுலா சென்றுவிட்டு தங்கள் ஊருக்கு திரும்பும் வழியில், திருப்பூர் மாவட்டம், தாராபுரம் வட்டம், தாராபுரம் தெற்கு கிராமம், மதுரை நெடுஞ்சாலை அபூர்வா ஹோட்டல் அருகே உள்ள அமராவதி ஆற்றில் புதிய ஆற்றுப் பாலம் அருகே நேற்று (16.1.2024) மாலை குளிக்கச் சென்றபோது எதிர்பாராதவிதமாக தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார்கள் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகவும் வேதனையடைந்தேன்.

river death

இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா இரண்டு இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும்
உத்தரவிட்டுள்ளேன் என்று குறிப்பிட்டுள்ளார்.